விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

அரச ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண பொறிமுறை


2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளில், அரச துறையின் ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்காக தீர்ப்புப் பொறிமுறையை அறிமுகப்படுத்தல் தொடர்பில் எட்டப்பட்டுள்ள தீர்மானம்.

தற்போது சில அரச ஊழியர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள், வேலை நிறுத்தம் போன்ற காரணங்களால் தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தனியார் துறையில் ஏற்படும் பிணக்குகள் மற்றும் வேலை நிறுத்தங்களைக் குறைப்பதற்காக 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தாலும், அரச துறையில் அவ்வாறான பொறிமுறை இல்லை. ´சுபீட்சத்தின் நோக்கு´ அரச கொள்கைப் பிரகடனத்தின் மூலம் தற்போதுள்ள தனியார் துறையின் ஊழியர் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக தீர்ப்புச் செயன்முறைக்கு ஒத்ததான செயன்முறையொன்று அரச துறை ஊழியர் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கு அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச துறையின் பிணக்குகளைத் தவிர்ப்பதற்காகவும் தீர்ப்பதற்குமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்மதங்கள், யோசனைகள், தலையீடுகள், தீர்த்தல் எனும் நான்கு அம்ச மூலோபாயங்களுடன் கூடிய பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஏற்புடைய தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK