வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் தேவையில்லாத பொருட்களை நாம் நிறுத்த வேண்டும் : ஏ.எல்.எம். அதாஉல்லா


 நூருல் ஹுதா உமர்

அரச ஊழியர்களின் சம்பளத்தை கூட்டுவதை பற்றி சிந்திப்பதை விட அவர்களின் சம்பளத்தினுள் எவ்வாறு வாழ்வை கொண்டுசெல்லலாம் என்பதற்கான வழிவகைகளை உருவாக்குங்கள் என்று 10 வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டோம். ஒரு காலத்தில் ஒரு அரச உத்தியோகத்தர் தனது 95 ரூபாய் சம்பளத்தில் தான் வெளியூர்களில் வேலைபார்த்து கொண்டு மாதம் முழுவதும் நிறைவாக சாப்பிட்டுக்கொண்டு, வாடகை கொடுத்து மீதிப்பணத்தில் ஒரு பவுன் நகைவாங்கிக்கொண்டு வீடுவரும் நிலை இருந்தது. ஆனால் இன்று வருடாந்த வரவு செலவு வரும் போது சம்பளத்தை கூட்டமாட்டார்களா எனும் நிலை இருக்கிறது. இந்த நிலை மாற்றம் பெற்று உள்நாட்டு உற்பத்திகள் பெருக்கப்பட்டு சத்துள்ள உணவுகள் மலிவு விலையில் கிடைக்க வேண்டும். அதனுடாக தற்போதைய சம்பளத்தை கொண்டே வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியும் என தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

நேற்று (21) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவுசெலவு திட்ட விவாத உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது உரையில்

இந்த வரவுசெலவு அறிக்கை உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கிறது. மஹிந்த அரசின் ஆட்சி எப்போதும் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்திருக்கிறது. வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் தேவையில்லாத பொருட்களை நாம் நிறுத்த வேண்டும். ஏனென்றால் எமது நாட்டின் சகல பிரதேசங்களிலும் அதைவிடவும் சிறந்த பொருட்கள் இருக்கிறது. அவர்களின் உற்பத்திகளை பெருக்கி நாட்டை வளப்படுத்தும் சந்தர்ப்பமாக இதனை பார்க்கிறேன்

கடந்த ஐந்தாண்டுகள் இந்த நாட்டின் உற்பத்திகள் சிக்கலை சந்த்தித்திருந்த போதிலும் இப்போது உள்ள அரசாங்கத்தின் உற்பத்தி கொள்கை திருப்தியளிக்கிறது. உலகில் எங்குமில்லாதவாறு இயற்கை வளங்கள் கூடிய அழகான நாடு எமது நாடு. இந்த நாட்டில் எல்லா மக்களும் சந்தோஷமாக கூட்டம் கூட்டமாக வாழ்கிறோம். இந்த நாட்டின் வளங்களை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என எமது நாட்டின் பாராளுமன்றமும் அரச தலைவர்களும் பொருளியலாளர்களும் முறைப்படி எண்ணுவார்களாயின் இந்த நாடு மக்களுக்கு சுபிட்சமே வந்து சேரும்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த சிறிமா அம்மையாரின் காலத்தில் இந்த நாட்டின் உற்பத்திகளை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. அந்த காலத்தில் எமது மாவட்ட நிலங்களில் எதை உற்பத்தி செய்ய முடியுமோ அவற்றை உற்பத்தி செய்ய நடவடிகளைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த காலகட்டங்களில் மாவட்டங்களுக்கிடையில் அரிசி ஏற்றுமதி செய்வதிலும் மிக இறுக்கம் இருந்தது. வட மாகாண உற்பத்தியாளர்கள் தனது உற்பத்திகளை நாடு பூராகவும் விற்பனை செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

நாட்டில் ஏதாவது அபிவிருத்தி நடைபெற வேண்டும் என்றால் சிறிய தியாகங்களை எல்லோரும் செய்ய வேண்டும் என்பதுக்கு அப்பால் திறந்த பொருளாதார கொள்கையை ஜே.ஆர் காலத்தில் கொண்டுவந்து வெளிநாடுகளின் குப்பை தொட்டியாக ஐக்கிய தேசிய கட்சி காரர்களினால் இந்த நாடு மாற்றப்பட்டுள்ளதை நாங்கள் காண்கிறோம். ஐக்கிய தேசிய கட்சி காரர்கள் நெல்லை பற்றியோ நெல் வளரும் செடி பற்றியோ  எவ்வித அறிவுமில்லாதவர்களாக இருந்தார்கள்

ஆனால் மஹிந்த அரசில் அபிவிருத்தி செய்தார்கள், விவசாயிகளுக்கு நன்மை செய்தார்கள், வீதிகளை ஒழுங்காக சீரமைத்து வடிவமைத்தார்கள், விவசாயிகள் பணத்தை சேகரித்து வைத்திருக்கும் உற்பத்தியாளர்களாக மாறினர். மஹிந்த அரசில் உற்பத்தி பொருட்கள் மலிவாக கிட்டியது. யுத்தத்தை மையமாக கொண்டு சில தலைவர்களும், அரசியல்வாதிகளும் வெளிநாட்டு முகவர்களாக இருந்ததால் எங்களின் உற்பத்திகள் குறைந்து, வெளிநாட்டு இறக்குமதிகள் கூடி விட்டது. குடிக்க பாலும், உன்ன உணவும் தன்னிறைவாக கிடைக்கும் நாட்டில் ஏன் தேவையில்லாத இறக்குமதிகள் வருகிறது.

எமது நாட்டில் சிறந்த மேச்சல் தரைகளும், அழகான குளங்களும் இருக்கிறது. எங்களுக்கு தேவையானவற்றை நாங்கள் உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனால் அவைகளை பற்றி சிந்திக்காமல் மக்களை சோம்பறிகளாக மாற்றி வெளிநாட்டவர்களுக்கு இந்த வளங்களை விற்பவர்களாகவே  சில அரச தலைவர்கள் கடந்த காலங்களில் இருந்திருக்கிறார்கள். அவைகள் முற்றுப்பெற வேண்டும் என்றார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK