அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கே. எம். அப்துல் முக்ஸித் அவர்களின் தலைமையில், தெஹிவளை முஹையத்தீன் ஜூம்மா மஸ்ஜித்தில் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான ஒன்று கூடல் கடந்த புதன்கிழமை (25.11.2020 ) நடைபெற்றது. இந்த ஒன்றுகூடலில் கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதியில் வாழும் மக்களின் நிலவரங்கள் அவதானத்தில் கொண்டு வரப்பட்டதுடன், பொதுவாக நாடாளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலின் கீழ் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட கிளையும், கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனமும் இணைந்து இவ்வுதவித் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் நிவாரணங்களை துரிதமாக பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே இவ்வுதவித் திட்டங்களில் தங்களது பங்களிப்பையும் வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் நற்கருமங்களை பொருந்திக் கொள்வானாக! ஆமீன்.
ஜெஸாக்குமுல்லாஹ் கைரன்.
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin