பசில் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2015 ஆம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post