அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Wednesday, November 4, 2020

அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயம்


உடன்அமுலுக்கு வரும் வகையில் நேற்று (04) நள்ளிரவு முதல் அரிசி உற்பத்தியாளர்களுக்கு மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1 கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி சம்பாவுக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாவாகவும் வௌ்ளை / சிகப்பு சம்பாவுக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டரிசி ஒரு கிலோ 92 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளை /சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச விற்பனை விலை 89 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment