உறவினரை அடக்கம் செய்வதற்காக சட்டத்தை மீறியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தாம் பதவி விலகத்தயார் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹேஷா விதானகே இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கொரோனா வைரஸின் விளைவாக நீதி அமைச்சரின் உறவினர் ஒருவர் இறந்துவிட்ட போதும் அவரின் உடலை தகனம் செய்வதற்கு பதிலாக இரண்டாவது பீ.சி.ஆர் சோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இரண்டாவது பீ.சி.ஆர் பரிசோதனையில் நோயாளி வைரஸ் பாதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டு அது தகனம் செய்யப்படுவதற்கு மாறாக அடக்கம் செய்யப்பட்டதாக விதானகே தெரிவித்துள்ளார்.

இது, தமது உறவினருக்காக நீதி அமைச்சர் சட்டத்தை வளைத்துள்ளமையை காட்டுகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, சட்டத்தை வளைக்கவில்லை என்றும், தனிப்பட்ட இலாபத்திற்காக ஒரு போதும் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்கள் இருந்தால் தனது அமைச்சுப் பதவியையும், நாடாளுமன்ற பதவியையும் விட்டு விலகத்தயார் என்றும் அலிசப்ரி கூறினாயுள்ளார்.