இலங்கையின் நாடாளுமன்றம் நாளைய தினம் இரண்டு மணி நேர கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய விதிமுறைகளை முன்வைப்பார் என்று நாடாளுமன்ற ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நாளை 3 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது.

இதன்போது வாய்வழி கேள்விகளுக்கு எந்த நேரமும் ஒதுக்கப்படாது, என்று நாடாளுமன்ற ஊடகப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இதேவேளை நாடாளுமன்ற வரலாற்றில் அமர்வுகளின் போது முதல்முறையாக நாளைய தினம் செய்தி சேகரிப்புக்காக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.