தீமை இருளை விரட்டி நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக தீபாவளிப் பண்டிகை அமைய வேண்டும் - அங்கஜன் இராமநாதன்


சமூகத்தில் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டி நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக இத் தீபாவளிப் பண்டிகை அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தீபாவளியாக இந்துக்களாகிய நாம் கொண்டாடுகிறோம். இருளில் இருந்து வெளிச்சத்திற்கும்,தீமையில் இருந்து நன்மைக்கும் மீண்டு, அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் தீபங்களை ஏற்றி இசமயச் சடங்குகளில் ஈடுபட்டு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம்.

தீபங்களின் வரிசையால் புற இருள் விலக்குவதனைப் போன்று எமது மனங்களை ஆக்கிரமித்திருக்கும் பொறாமைஇ சூதுஇ வஞ்சகம், தானென்ற கர்வம் போன்ற தீய எண்ணங்களை விலக்க வேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்.இம்முறை கொரோனா அச்ச சூழ்நிலையில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எமது நாடு கொரோனா எனும் தீமையில் இருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.இத் தீபாவளிப் பண்டிகை கொரோனா எனும் கொடிய நோயினை அழிப்பதற்கானதாக அமையட்டும்.அந்தவகையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சியான இந்நாளில் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK