ஐ.தே.கட்சியின் தலைமையகத்தை பராமரித்து செல்ல முடியாத நிலைமை - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Thursday, November 12, 2020

ஐ.தே.கட்சியின் தலைமையகத்தை பராமரித்து செல்ல முடியாத நிலைமை


ஸ்ரீ ஜயவர்தனபுர - பிற்றகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை பாரமரித்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த மாதம் அவர்களில் சம்பளத்தில் அரைவாசியே வழங்கப்பட்டுள்ளதுடன் சிறு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

சிறிகொத்தவில் உள்ள தொலைபேசி அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் உள் வரும் அழைப்புகள் மாத்திரம் செயற்பட்டு வருகின்றன.

சிறிகொத்தவின் பராமரிப்பு செலவுகளுக்கான பணத்தை இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் தயா கமகேவே செலுத்தி வந்தார்.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் நீண்டகாலமாக கட்சியின் தலைமையகத்திற்கு செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment