இன்று பிரதமர் மஹிந்தவிற்கு வயது 75

பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷவின் 75 ஆவது பிறந்த தினம் (18) இன்றாகும். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெறவுள்ளன.

1945 நவம்பர் 18 ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ ஆளுமை மிக்கதொரு தலைவராவார்.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 1970 மே 27 அன்று பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு  பெலியத்த தொகுதியிலிருந்து  பாராளுமன்றத்திற்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 7, 1970 அன்று பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக பதவியேற்றார்.

மஹிந்த ராஜபக்ஷ 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், அன்றிலிருந்து  2015 வரை அவர் ஜனாதிபதியாக இருந்தார்.

ஏறக்குறைய மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட  உள்நாட்டு போரை மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தில்  இராணுவ ரீதியில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.  

2004நவம்பர் 19 முதல் 2005 ஜனாதிபதித் தேர்தல் வரை, 26 ஒக்டோபர் 2018 முதல் 15 டிசம்பர் மற்றும் 2019 நவம்பர் 21 வரை இலங்கையின் பிரதமராகவும் இருந்துள்ளார். பெப்ரவரி 6 முதல் ஏப்ரல் 2 வரை இரண்டு சந்தர்ப்பங்களில், மீண்டும் 18 டிசம்பர் 2018 முதல் நவம்பர் 21 வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK