மஹர சிறைச்சாலை அமைதியின்மை - 4 பேர் பலி!


இன்று (29) மாலை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 04 பேரின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
அதேபோல், குறித்த சம்பவம் காரணமாக காயமடைந்த 24 கைதிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதேவேளை, மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளினால் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதில் ஒரு தரப்பினர் சிறைச்சாலையினுள் தீ வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post