2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 2021 ஜனவரி 1 முதல் ஆம் திகதி முதல் 1000 ரூபாவாக உயர்த்த முன்மொழிந்துள்ளார். பால் பண்ணை அபிவிருத்திக்கு 500,000 ரூபா கடன் வழங்கவும் அவர் முன்மொழிந்துள்ளார். உள்ளூர் மீன்பிடி மேம்பாட்டுக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.