இனவாதத்தின் மற்றுமொரு முகம் : தலைவர் றிசாட்டை கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை

முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனை கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் இனவாதத்தின் மற்றுமொரு வெட்டுமுகமாகும். தலைவர் றிசாட் பதியூதீனை கைது செய்வதற்கு கோட்டை நீதிமன்றம் அனுமதி வழங்காத நிலையில் பொலிஸ் குழுக்களின் மூலமாக கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளமையை மீள்பரிசீலனை செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

றிசாட் பதியூதீனின் அரசியல் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாத இனவாதிகள் அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருப்பது தொடரான நடவடிக்கையாகும்.
பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சுதந்திரமாக இருக்கின்றார்கள். ஆனால், தலைவர் றிசாட் பதியூதீனை கைது செய்வதற்காகவே போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்கள்.
தலைவர் றிசாட் பதியூதீனை கைது செய்ய வேண்டுமென்று பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள். அது பற்றி விசாரணைகளும் நடைபெற்றன. அவற்றில் எதிலும் அவரை குற்றவாளியாகக் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொது சொத்துக்கள் மோசடி தொடர்பில் தலைவர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றின் உதவியை நாடுமாறு சட்டமா அதிபர் இன்று காலை குற்றப் புலனாய்வுதுறைக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுதுறையினர் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கைது ஆணைக் கோரிக்கையை முன்வைத்தனர்.
எனினும் றிசாட் பதியுதீனை கைது செய்ய கைது ஆணை அவசியமில்லை என்றும் பொலிஸார்; சட்டத்தின் அடிப்படையில் அவரை கைது செய்ய முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து சட்டத்தின் அடிப்படையில் றிசாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
தற்போது தலைவர் றிசாட் பதியுதீனை கைது செய்வதற்காக இரண்டு குழுக்கள் அவரது கொழும்பு இல்லத்துக்கும், மன்னார் இல்லத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபா அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தலைவர் றிசாட் பதியூதீனை கைது செய்வதற்கு நீதிமன்றம் நேரடியாக அனுமதி வழங்காத நிலையிலும் கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை வேறு உள்நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கின்றது.
அவரை கைது செய்ய வேண்டுமென்பது பேரினவாதிகளின் நீண்ட கால திட்டமாகும்.
இனவாதிகளை சந்தோசப்படுத்துவதற்காக தலைவர் றிசாட் பதியூதீன் குறி வைக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் அவரை தோற்கடிப்பதற்கு பேரினவாதிகள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் மக்கள் முறியடித்திருந்தார்கள். இந்நிலையில் தலைவர் றிசாட் பதியூதீனின் அரசியல் வளர்ச்சியை மழுங்கடிப்பதற்காக எடுக்கப்படும் மற்றுமொரு நடவடிக்கையாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
கடந்த காலங்களின் தலைவர் றிசாட் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்கும், அவற்றில் உண்மையில்லை என்று நிருபிப்பதற்குமுரிய சக்தியை அல்லாஹ்வின் உதவியாலும், பொது மக்களின் துஆக்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததது. அது போன்று தலைவர் றிசாட் பதியூதீனுககாக துஆக்களை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
எம்.ஏ.எம்.தாஹீர்,
தவிசாளர்,
பிரதேச சபை,
நிந்தவூர்.
13.10.2020


0/Post a Comment/Comments

Previous Post Next Post