மு.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் படுதோல்வி


முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகரசபைக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஐ. அப்துல் வாசித், 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இன்று திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்த பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதனை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள் உட்பட 12 பேர் வாக்களித்தனர்.

குறித்த திட்டத்துக்கு ஆதரவாக 05 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதற்கமைய 07 மேலதிக வாக்குகளால் மேற்படி வரவு – செலவு திட்டம் படுதோல்வியடைந்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலானா அணியின் 05 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 03 உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 01 உறுப்பினர் மற்றும் பசீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் 01 உறுப்பினர் என, மொத்தம் 12 உறுப்பினர்கள் குறித்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனையடுத்து வரவு – செலவுத் திட்டம் திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என தவிசாளர் வாசித் சபையில் தெரிவித்தார்.

இதன்போது, வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களுடன், ஆதரவாக வாக்களித்த உறுப்பினரொருவர் பிரச்சினையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK