அரசாங்கம், அமெரிக்காவுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எம்.சி.சி எனப்படும் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடாது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின், தாம் அரசாங்கத்துடன் இணைந்திருக்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.