அதிரடியாக குறைக்கப்படும் ரணில் - மைத்திரியின் பாதுகாப்பு


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் 100 பேரில் 94 பேர் மீளப்பெறப்படவுள்ளதுடன், பொலிஸார் 100 பேரில் 54 பேர் மட்டுமே தொடர்ந்தும் சேவையாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பொலிஸார் 200 பேரில் 60 பேர் மட்டுமே தொடர்ந்தும் சேவையாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் தங்கியிருந்த வீட்டை திரும்ப ஒப்படைக்கும் படியும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post