அடுத்த வாரத்தில் முக்கிய திணைக்களங்களில் நிறுத்தப்படும் பொது மக்கள் சேவைகள்


திர்வரும் வாரம் அதாவது அக்டோபர் 12 - 16ஆம் திகதி வரையில் போக்குவரத்துத் திணைக்களத்தின் பொது மக்களுக்கான சேவைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே.அளககோன் விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

தற்போது நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொவிட் - 19 பரவல் நிலையை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாராஹேன்பிட்டி மற்றும் மற்றும் வேரஹெரவிலுள்ள அதன் அலுவலகங்களில் பொது மக்கள் சேவைகள் இடம்பெறாது.

இதேவேளை, ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் வாகன அனுமதிப் பத்திர புதுப்பித்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றன.

குறித்த காலப் பகுதியில் காலாவதியாகும் வாகன அனுமதிப்பத்திரங்களை மீள் புதுப்பிக்கும்போது, அதற்கென அபராதத் தொகை விதிக்கப்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா பரவல் நிலையைக் கருதிற்கொண்டு குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள பொது மக்கள் சேவைகள் எதிர்வரும் வாரம் இடம்பெறாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK