டொக்டர் ஷாபியினால் கருதடை செய்யப்பட்டதாக கூறிய பல தாய்மார்கள் குழந்தை பெற்றெடுப்பு!


சிங்கள தாய்மார்களுக்கு பலவந்தமாக கருவுறாமை அறுவை சிகிச்சைகள் செய்ததாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் சிஹாப்தீன் மொஹமம்மட் ஷாபி மீது போலீஸ் புகார் அளித்த பல தாய்மார்கள், இப்போது குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளனர்.

800க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்திருந்த நிலையின், 268 புகார்களை இதுவரை போலீசார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த 268 தாய்மார்களின், சுமார் 10 தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். மேலும் தனது புகார்களை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் 650 புகார்கள் விசாரிக்கப்பட உள்ள நிலையில், அதில் மேலும் பல தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுத்ததாக அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

(Ceylon Muslim) 

0/Post a Comment/Comments

Previous Post Next Post