நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள கோரிக்கை


அரசால் குத்தகைக்கு வழங்கப்படுவதாக கூறப்படும் காணி தொடர்பான ஆவணங்கள் ஏதும் இருப்பின் அது தொடர்பான பிரதிகளை தனக்கு தருமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சம்பந்தப்பட்டவர்களை கோரியுள்ளார்.

கடந்த 2020.10.02ஆம் திகதிய 2196ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப் பத்திரிகையில் திருகோணமலை மாவட்டத்தின் பின்வரும் காணிகளை பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக நீண்ட காலக் குத்தகைக்கு வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் குறித்த திகதியில் இருந்து 6 வார காலங்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

எனக்கு தெரிந்த வரை இக்காணிகள் தற்போது பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வருபவை. எனவே, இக்காணி தொடர்பான ஆவனங்கள் ஏதும் இருப்பின் அது தொடர்பான பிரதிகளை ஆட்சேபனை தெரிவிப்பதற்கு எனக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல தற்போது காணியை பராமரிப்போர், சமூகநல அமைப்புகளும் தாமதமின்றி இந்த ஆட்சேபனையைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் சமூக நலன் கருதி இந்த விடயத்தில் ஒன்றுபடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இயன்றவரை இந்த தகவலை அதிகம் பகிருங்கள்

காணிகள் விபரம்:

1. புல்மோட்டை 1 கி.உ பிரிவில் எப்.வி.பி 30ஆம் இலக்க வரைபடத்தின் 1147ஆவது காணித்துண்டு

2. புல்மோட்டை 3 கி.உ பிரிவில் எப்.ரி.பி 12ஆம் இலக்க வரைபடத்தின் 1460ஆவது காணித்துண்டு

3. புல்மோட்டை 1 கி.உ பிரிவில் எப்.ரி.பி 12ஆம் இலக்க வரைபடத்தின் 1436ஆவது காணித்துண்டு

4. புல்மோட்டை 1 கி.உ பிரிவில் எப்.வி.பி 30ஆம் இலக்க வரைபடத்தின் 1139ஆவது காணித்துண்டு

5. தென்னமரவாடி கி.உ பிரிவில் எப்.ரி.பி 12ஆம் இலக்க வரைபடத்தின் 1446ஆவது காணித்துண்டு

6. திரியாய் கி.உ பிரிவில் எப்.வி.பி 31ஆம் இலக்க வரைபடத்தின் 46ஆவது காணித்துண்டு

7. கும்புறுப்பிட்டி கிழக்கு கி.உ பிரிவில் டொப்போ பி.பி 37ஆம் இலக்க வரைபடத்தின் 3281ஆவது காணித்துண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK