நிந்தவூரில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

'சப்ரிகம' திட்டத்தின் கீழ் நிந்தவூரில் வீதி அபிவிருத்திப் பணிகள் நேற்று (11.10.2020) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளர் கீர்த்திசிறி மீராசாஹிவுவின் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றைய அரசாங்கத்தின் கிராமத்திற்கு ஒரு வீதி எனும் கருப்பொருளில் இவ்வபிருத்தி முன்னெடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வனஜீவராசிகள் பாதுகாப்பு, அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான டபிள்யூ. வீரசிங்க ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

நிந்தவூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் நிந்தவூரில் சுமார் 03முஆ வீதி அபிவிருத்தி செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் போது நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் வனஜீவராசிகள் பாதுகாப்பு, அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான டபிள்யூ. வீரசிங்க ஆகியோர்களுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளர் கீர்த்திசிறி மீராசாஹிவுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

நிந்தவூர் பிரதேசம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அவற்றினை நிறைவேற்றித் தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, 'சப்ரிகம' திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேசத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தமைக்கு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்








BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK