ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கை. - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Saturday, October 24, 2020

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கை.


அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த

அதன் நான்கு எம்.பி.க்கள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் குறித்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கை:

சமகி ஜன பலவேகய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தினை அடுத்து,

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீம், அதன் நாடாளுமன்றக் குழுவை நேற்று (23) மாலை தனது இல்லத்தில் கட்சி செயலாளர் நிஜாம் கரியாப்பர் முன்னிலையில் கலந்துரையாடலுக்கு அழைத்தார்.

'20 A ' மீதான வாக்களிப்பு தொடர்பான விடயங்கள் குறித்து நீண்ட விவாதத்திற்குப் பிறகு,

'20 A'வுக்கு ஆதரவாக வாக்களித்த SLMC நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது,

இந்த விஷயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க இது தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர், கட்சி செயலாளர் மற்றும் நான்கு எம்.பி.க்கள், (எச் எம் எம் ஹரீஸ், பைசல் காசிம், எம் தவ்ஃபீக், மற்றும் ஹாபிஸ் நசீர் ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பில் உரிய தீர்மானங்கள் எடுக்க கட்சியின் உயர்பீடம் விரைவில் கூட வேண்டுமென்று தலைவர் இறுதியில் தெரிவித்தார்.


M Nizam Kariapper

Secretary

Sri Lanka Muslim Congress

24th October 2020.


No comments:

Post a Comment