வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையினுள் பணியாற்றிய ஊழியர் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த ருமேஷ் பெர்னாண்டோ என்ற 20 வயதுடைய இளைஞன் ஆகும்.
அவரது உடலின் மாதிரிகள் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக மாரவில நீதிமன்றத்தின் வைத்திய அதிகாரி ருவன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியில் இருந்து வென்னப்புவ ஹோட்டலில் பணிக்காக சென்றுள்ளார்.
அவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மர்மமான இந்த மரணம் தொடர்பில் வென்னப்புவ தலைமையத்தின் பிரதான பொலிஸ் அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK