கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அதிர்வு குறித்து ஆய்வு செய்ய புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் மற்றொரு அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 29இல் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து இரவு 8.30 மணியளவில் ஒரு அசாதாரண அதிர்வு ஏற்பட்டது.
எனினும் இந்த சம்பவம் புவியதிர்வு என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக இயக்குநர் சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மற்றொரு குழுவை இன்று காலை கண்டியில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார்.