உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஞ்சிபாணி இம்ரான், இன்றைய தினம் நோய் வாய்ப்பட்ட நிலையில் பூசா இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரின் சோதனைகளை நிறுத்துமாறும், தொலைபேசி அழைப்புக்களை எடுப்பதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகை நிறுத்தப்படக் கூடாது என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பாரியளவு போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரான், டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.