விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா

 


றாசிக் நபாயிஸ்-

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப்பட்டமளிப்பு விழா புதன் கிழமை (16) ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

இன்றைய முதலாவது அமர்வில் பிரயோக விஞ்ஞானபீடம் மற்றும் பொறியியல்பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம் பெற்றதுடன், பிற்பகல் கலை கலாசாரபீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா இடம் பெறவுள்ளது.

இரண்டாம் நாள் அமர்வாக வியாழக்கிழமை (17) காலை 9 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப்பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம் பெறவுள்ளதுடன், பிற்பகல் முகாமைத்துவ வர்த்தகபீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

13ஆவது இப்பட்டளிப்பு விழாவில், மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப்பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன், 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இப்பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம், பதிவாளர் எஸ்.சத்தார் மற்றும் பீடங்களின் பீடாதிபதிகள், துறை தலைவர்கள். பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.




BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK