பொலிவியா ஜனாதிபதிக்கு கொரோனா - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, July 12, 2020

பொலிவியா ஜனாதிபதிக்கு கொரோனா

பொலிவியா நாட்டு ஜனாதிபதி ஜினைன் அனேஸ்ஸுக்கு (Jeanine Añez) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக் கொண்டபடியே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
பொலிவியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் உட்பட 7 அமைச்சர்கள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், இன்று காலை நிலவரப்படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment