கொரோனாவை தொடர்ந்து நிமோனியா - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Sunday, July 12, 2020

கொரோனாவை தொடர்ந்து நிமோனியா

(FLASH NEWS | கஜகஸ்தான்) – கஜகஸ்தானில் கொரோனாவை விட ஆபத்தான நிமோனியா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டில் உள்ள சீன தூதரகம் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, சீன அறிக்கைகளை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட கஜகஸ்தானின் சுகாதார அமைச்சகம், அவை ‘போலி செய்தி’ என்று தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கஜகஸ்தானில் விவரிக்கப்படாத நிமோனியா பரவுவது கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு நம்புகிறது என WHO இன் அவசரகாலத் தலைவர் டாக்டர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.
தற்காலிகமாக வைரஸ் தொற்று இல்லை என சோதிக்கப்பட்ட வேறு சில நிமோனியாக்களுக்கு தவறான சோதனைகள் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் உண்மையான சோதனை மற்றும் சோதனையின் தரத்தை ஆய்வு செய்கிறோம் என ரியான் குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ்ரேகளை மறுபரிசீலனை செய்வதற்கும், நிமோனியா வழக்குகள் கொரோனாவுடன் ஒத்துப்போகிறதா என்பதைப் ஆய்வு செய்வதற்கும் WHO உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ரியான் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குகளில் பல கொரோனா என கண்டறியப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment