பொதுஜன பெரமுன இனவாதத்தையும் தனி நிகழ்ச்சி நிரல்களையும் கொண்ட கட்சி : இம்ரான் மஹ்ரூப்

ஸ்ரீலங்கா பொதுஜன பெர முன கட்சி என்பது தனி இனவாதத்தையும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையும் கொண்ட கட்சியாக செயற்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா நகர சபை மைதானத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து நேற்றையதினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த தேர்தல் காலப்பகுதியில் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பனவே போட்டியிட்டன. தற்போது பல கட்சிகளை கொண்ட பல வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
சிறந்த தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் சஜித் உள்ளார். இந்த தேர்தல் எப்படிப்பட்ட தேர்தல் என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட சுய தேவைக்கான தேர்தலா? இலாப நோக்கத்தை கொண்ட ஒட்டு மொத்த சமுதாயத்துக்கான தேர்தலா என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
சஜித் பிரேமதாச மக்களின் பிரச்சினைகளை உணர்ந்தவர். திருகோணமலைக்கு அதிகப்படியாக விஜயம் செய்துள்ளார். மூவின மக்களையும் அரவணைத்துச் செல்வதுடன் வீட்டுத் திட்டங்கள் என பல சேவைகளை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK