காலி வீதியின் கஹவ தொடக்கம் தெல்வத்த வரையிலான பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடலலை சீற்றம் காரணமாக குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இலகு ரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மிடியாகொட பொலிசார் தெரிவித்திருந்தனர்.