வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தைக்கு அருகாமையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைகளுக்கு அமைய மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இன்று நண்பகல் ஏற்பட்ட விபத்து காரணமாக 6 கடைகள் முழுமையாக எரிந்துள்ளன. சுமார் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டன.
இந்த அனர்த்தம் காரணமாக காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் வேறு வீதிக்கு மாற்றியமைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
தீயணைக்க சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.