அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுக்காக விருது வழங்கி கொளரவிப்பு. - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Friday, July 17, 2020

அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுக்காக விருது வழங்கி கொளரவிப்பு.

சில்மியா யூசுப்.

அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுக்காக அண்மையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாகிய
இம்ரான் மகரூப்.

முஸ்லிம் இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவருக்கு அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் Manthri.lk யினால் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த பாராளுமன்ற காலத்தில் தொன்னூறு வீதத்துக்கு அதிகமான பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

 அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர் 
என்பது குறிப்பிட்ட ஒரு  அம்சமாகும்.


சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் இம்ரான் மகரூப் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவர் மட்டுமே அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு இந்த கௌரவத்தை பெற்றுள்ளனர் என்பது குறுப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment