கொழும்பு புறநகர் பகுதியில் (colombo suburb) கடந்த சில நாட்களாக தேங்காய் ரொட்டியும் பன்றி இறைச்சிக் கறியும் என்ற வர்த்தகம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த சிங்கள சமூகத்தில் ஓரளவு அறியப்பட்ட புகைப்படக்கலைஞர் ஒருவர் இதனை ஆரம்பித்துவைத்தார்.
சமூகவலைத்தளங்களில் ரொட்டியும் பன்றி இறைச்சிக் கறியும் என்ற ஒரளவு பிரபலமடைந்தது. இதனால் திருப்தியடையதாக உரிய நபர் தனது பேஸ்புக்தளத்தில் இப்படி எழுதினார்.
'ரொட்டியும் பன்றி இறைச்சிக் கறியும்' என்ற பெயரில் நான் தொடங்கியிருக்கும் இந்த வர்த்தகத்திற்கு முஸ்லிம்களின் அச்சுறுத்தல் இருக்கிறது. ஆகவே இந்த வர்த்தகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்ல உதவுங்கள்" என்று பதிவிட்டிருந்தார். .
எழுதுதியது தான் தாமதம். பல இளைஞர்கள் முகநூலில் உருவாக்கினார்கள். நாம் உங்கள் வர்த்தகத்தைப் முஸல்மான்களிடமிருந்து பாதுகாக்கிறோம் என்று 20ற்கும் 30ற்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞர்கள் கொதித்தெழுந்தார்கள். அவரது வர்த்தகம் ஜாம் ஜாம் என்று களைகட்ட ஆரம்பித்தது.
இதில் நகைச்சுவை என்னவென்றால் முஸ்லிம் வாசனையே இல்லாத பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள குறித்த பகுதியில் ' முஸ்லிம் அச்சுறுத்தலைக் காட்டி' தனது வர்த்தகத்தில் பெரும் இலாபத்தை ஈட்டிக்கொண்டார்.
நிற்க; தெஹிவளை சம்பத் வங்கி சம்பவம் உங்களுக்கு நினைவில் இருக்கும். அதன் சரி பிழையை ஒரு பக்கம் வைப்போம்.
சம்பத் வங்கியில் வங்கிக் கணக்கைப் பேணுபவன் என்ற ரீதியில், அண்மைக்காலமாக இந்த வங்கி வாடிக்கையாளரிக் கடுமையான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்திருந்தது
சம்பத் வங்கியின் பெரும்பாலான ஏ.ரி.எம் இயந்திரங்கள் இயங்குவதில்லை. அதன் தரவுகள் அடிக்கடி திருடப்பட்டமை, முறையான வாடிக்கையாளர் சேவை இல்லாமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களினால் பல வாடிக்கையாளர் தமது சம்பத் கணக்கை மூடிவிட்டு வேறு தனியார் வங்கிகள் மீது கவனம் செலுத்தினார்கள்.
ஆனால் தெஹிவளை சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் எமது வங்கியை வீழ்த்த ஆரம்பித்துள்ளார்கள் என்று தந்திரோபாயமாக முகநூலில் சிலர் எழுத ஆரம்பித்தார்கள். அடுத்த நிமிடம் சம்பத் வங்கியைப் பாதுகாக்கும் சங்கம் என்ற குழுவை முகநூலில் உருவாக்கினார்கள்.
பல்லாயிரம் கோடி ரூபா விளம்பரத்தாலும் பெற்றுக்கொள்ள முடியாத அனுதாபத்தை ஒரு பேஸ்புக் லைவ் மூலம் சம்பத் வங்கி உருவாக்கிக்கொண்டது.
ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் சம்பத் வங்கயில் புதிய கணக்கை ஆரம்பித்தார்கள். இன்று சம்பத் வங்கியின் சகல குறைகளும் மறைக்கப்படு அது பிரதான இனத்தில் காவலனாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை என்று கூறிவிட்டு முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று pocket meetings நடத்துவதும் இதன் ஒரு பகுதியாகும்.
முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் இன்று பிரதான சந்தைப்படுத்தல் strategy ஆக மாறியிருக்கிறது. உணர்வுகளுக்கு மதிப்பளிப்தை விட எதிர்ப்பு அரசியலில் மறைந்துள்ள முதலாளித்துவத்தின் சந்தைப்படுத்தல் மூலோபாயம் பற்றி அறிந்து நிதானமாக செயற்படுவோம். இது தேர்தல் காலம்