உயர்தர வகுப்பு மாணவனின் புத்தாக்கத்தில் உருவான நாடிக் குழல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயர் தரத்தில் கல்விகற்கும் மாணவர் ஒருவர் உருவாக்கிய இணைப்பற்ற நாடிக் குழல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் நேற்று(13) முற்பகல் கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் வெனுர விஜேசேகர என்ற உயர்தர மாணவன் தமது கண்டுபிடிப்பு தொடர்பாக ஜனாதிபதி அவர்களை தெளிவுபடுத்தினார்.


உபகரணத்தை பரீட்சித்த ஜனாதிபதி அவர்கள், மாணவனின் திறமையை பாராட்டினார். வெனுர விஜேசேகர கண்டி திருத்துவக் கல்லூரியில் க.பொ.த உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்கின்றார். அவர் உருவாக்கிய நாடிக் குழலை இணைப்பின்றி பயன்படுத்த முடியும். அதன் மூலம் தனிநபர் இடைவெளியை பேணி நோயாளியை பரிசோதிப்பதற்கு வைத்தியருக்கு முடியும்.
மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி மற்றும் தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.13

0 Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin