பொதுத் தேர்தலில் என்னுடன் கைகோர்க்க முன் வாருங்கள் பாராளுமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுப்பேன் -அக்குறணையில் ஏ.எல்.எம். பாரிஸ் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Thursday, June 25, 2020

பொதுத் தேர்தலில் என்னுடன் கைகோர்க்க முன் வாருங்கள் பாராளுமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுப்பேன் -அக்குறணையில் ஏ.எல்.எம். பாரிஸ்

(மினுவாங்கொடை நிருபர்)
ஆளும் கட்சியுடன் இணைந்து நாம் செயற்பட்டால்தான், எமது மறுக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கு ஒத்துழைப்புத் தருவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. காலாகாலமாக நாம் தோற்றுப் போயிருக்கின்றோம். இதனை, இத்தேர்தல்; வெற்றியின் மூலம் நாம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

அக்குறணையில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசார பணிகளின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொர்ந்தும் உரையாற்றும் போது, எமது எதிர்கால சந்ததிகள் சிறப்புடன் சந்தோஷமாக வாழ வேண்டுமென்றால், நாம் நிச்சயமாக ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவருக்கே எமது ஆதரவுகளை வழங்க முன்வர வேண்டும். இதற்காகவே, ஜனாதிபதியின் விஷேட வேண்டுகோளுக்கு இணங்க, இத்தேர்தலில் எமது சமூகம் சார்பாக கண்டி மாவட்டத்தில்; ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளராக நான் களமிறக்கப்பட்டுள்ளேன்.

முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புவதற்காகவும், அவர்களுக்காக அவற்றை உரிமையுடன் பெற்றுக்கொடுப்பதற்காகவும் நான் முன் வந்துள்ளேன். இறைவன் நாட்டத்தினால் எமது முஸ்லிம் சமூகத்தை பிரதி நிதித்துவப் படுத்துவதற்காக, இம்முறை தேர்தலில் போட்டியடுவதற்காக எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதற்காக, முஸ்லிம்கள் சார்பாக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.


நாட்டின்  பங்காளிகளாக இருக்கும் உங்களுக்கு, உடுநுவர தொகுதியில்; பிறந்து வளர்ந்து வாழ்ந்தவன் என்ற உண்மையான நன்நோக்கம் கொண்டு எனது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். கண்டி மாவட்டத்திற்குள் கல்வித்துறையுடன் நிறைந்த, பொருளாதரத்தைப் பலப்படுத்தி, அரச மட்டத்தில் உயர்தரமான ஸ்தானத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அவசர, அவசிய தேவைகளை மேற்கொள்வதே எனது முதலாவதும் பிரதானமானதுமான பணியாகும். அத்துடன் கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமிய பாதைகளையும் மேலும் செப்பனிட்டு அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் என்னால் எடுக்கப்படும். இதேவேளை, எமது மாவட்ட பாரம்பாரிய தொழில் நடவடிக்கைகளையும் பாதுகாத்து, அவற்றை மேல்மட்டத்திற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவேன் என்பதையும் இங்கு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றன்.


என்னிடம்; பொய்வாக்குறுதிகள் இல்லை. உண்மையான நிலைப்பாட்டுடனேயே இவற்றை நான் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நம்பிக்கையுடன் என்னுடன் கைகோர்க்க முன் வாருங்கள். நான் வெற்றி பெற்றால், நீங்களும் வெற்றி பெறுவீர்கள். எனவே, பொதுத் தேர்தலில் உங்கள் வாக்குகளைச் சிந்தித்து வழங்குமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment