- ரிம்சி ஜலீல்-

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்டம் குளியாப்பிடிய தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று (28) மாலை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி 16ம் இலக்கத்தில் போட்டியிடும் குளியாப்பிடிய வேட்பாளருமான முதுகலைமாணி எம்.என். நஸீர் தலைமையில் மெடிவெவ, கெகுணகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தேசிய ஒற்றுமைக்கான பாக்கிர்மாக்கார் நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர்: S சுபைர்தீன்  முன்னாள் அமைச்சர் உபாலி பியசோம, குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர்களான சபீர்,அஸ்ஹர், இல்ஹாம் சத்தார், அன்பாஸ் அமால்தீன், பள்ளிவாசல் நிர்வாகிகள், பல்வேறு சங்க உறுப்பினர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.