( மினுவாங்கொடை நிருபர் )

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஆலோசனையின் கீழ் மத்திய வை.எம்.எம்.ஏ. கிளையும், வை.டப்ளியூ.எம்.ஏ.  (பெண்கள் பிரிவும்) இணைந்து நடாத்திய  மாபெரும் இரத்ததான முகாம், கடந்த  (14) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, கொழும்பு - 09, தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தில் இடம்பெற்றது. 

சமகாலத்தில் இரத்தத் தட்டுப்பாடு இருப்பதின் காரணத்தினால், தேசிய இரத்த வங்கியின் விசேட வேண்டுகோளுக்கு அமைய இத்தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், இந்த  முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன மத மொழி  பேதமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இதில் கலந்துகொண்டனர். தொடர்ந்து பேரவையினால் பல வருட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும்  இந்நிகழ்வில், அஷ்ஷெய்க் நுஸ்ரத் நெளபர் (அ.இ.ஜ.உ.), வெலிமட சுமண ஸ்தீவர தேரர், தெமட்டகொடை பொலிஸ் பொறுப்பதிகாரி சாந்த ஜயசிங்க, கொழும்பு மாநகர சபை சுகாதாரப் பரிசோதகர் அப்துர் ரஹ்மான், தேசிய இரத்த வங்கி டாக்டர் ஷானிகா சில்வா, வை.டப்ளியூ.எம்.ஏ. (மகளிர் பிரிவு) தலைவி பவாஸா தாஹா, வை.எம்.எம்.ஏ. பதில் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி, மத்திய வை.எம்.எம்.ஏ. தலைவர் எம்.என். காமில், உப தலைவர் மொஹமட் இம்ரான் ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்