திருமண வைபவங்கள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கையை 200ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பான முன்மொழிவு, கொவிட்-19ஐ கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

அகில இலங்கை நிகழ்வு மண்டபங்கள் மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக திருமண வைபவம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை 100ஆக இதுவரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை போதாது என்று குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.