கேள்வி:- உங்களைப் பற்றிக் கூற முடியுமா?
பதில்:- அநுராதபுரம் மாவட்டத்தின் நாச்சியாதீவை சேர்ந்த நான், எனது ஆரம்பக் கல்வியை நாச்சியாதீவு முஸ்லிம் மகாவித்தியாலயம் மற்றும் இகிரிகொள்ளாவ அன்நூர் தேசிய பாடசாலை ஆகியவற்றில் கற்றேன். உயர்கல்வியை வடமேல் மாகாணத்தின் குருநாகல் கெகுணுகொள்ள தேசிய பாடசாலையில் கற்றேன். நான் வணிக முகாமைத்துவப் பட்டதாரி ஆவேன்.
கேள்வி: –நீங்கள் ஒரு தொழில் அதிபராக இருக்கின்றீர்கள். சமூகநலன் கருதி எவ்வாறான பொது விடயங்களை செய்கின்றீர்கள்?
பதில்:- கல்வியைத் தொடர முடியாமல் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுகின்றேன். பாடசாலைகளின் கல்வி முன்னேற்றம் மற்றும் பாலர் பாடசாலைகளின் முன்னேற்றத்துக்கும் உதவி புரிகின்றேன். பல்வேறு பொது விடயங்களுக்கு உதவிகள் புரிந்து வருகின்றேன். எனது சொந்த மாவட்டமான அநுராதபுரம் மாவட்டத்திலும் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் என்னால் இயலுமான உதவிகளை செய்து வருகின்றேன். அந்த விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வேன்.
கேள்வி:- நீங்கள் பிரபல தொழில் அதிபராக இருக்கின்றீர்கள். உங்களிடத்தில் போதிய பொருளாதாரமும் காணப்படுகின்றது. அப்படி இருந்தும் ஏன் அரசியலுக்குள் வருவதற்கு நினைத்தீர்கள்?
பதில்: –அநுராதபுரம் மாவட்டத்தின் வரலாற்றைப் பார்க்கின்ற போது, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் கடந்த 2015 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல் ஊடாக அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து சிறுபான்மை முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். அவருடய வெற்றிக்காக அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களும் நானும் பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளோம்.
அவ்வாறு தெரிவான உறுப்பினர் கட்சித் தலைமைத்துவத்துக்கும், கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்ததை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினால் எனக்கு பல அழைப்புக்கள் வந்தன. அரசியலுக்கு வரும்படி எனக்கு அழைப்பு வந்தது. அந்த வகையில் அநுராதபுரம் மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது குறிக்ேகாள். அதன் நன்மைகள் எமது சமுகத்திற்குச் சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் காரணமாக அந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டேன்.
பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட ஹொரவபொத்தான தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளர் பதவியும் எனக்கு வழங்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.
கேள்வி: –ஐக்கிய மக்கள் சக்தியில் இம்முறை நீங்கள் களமிறங்கியுள்ளீர்கள் அதே நிலையில் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட வேறு கட்சிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?
பதில்:- ஏனைய கட்சிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற விடயம் அவர்களுக்கு நன்கு தெரியும். அவ்வாறு தெரிந்தும் அவர்கள் போட்டியிடுகின்றனர். அதனால் முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை சிதறடிக்காமல், வெற்றிபெறும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் எனக்கு வழங்க வேண்டும். அதற்காக முஸ்லிம் கிராமங்களிலுள்ள இளைஞர் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைவரும் அணிதிரன்டுள்ளனர். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள் காணப்படுகின்றது. நான் வெற்றிபெறும் பட்சத்தில் அநுராதபுரம் மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதோடு, அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம் மக்கள் பெரிதும் நன்மையும் அடைவார்கள் என்ற செய்தியினை இம்மாவட்டத்திலுள்ள எனது அன்புக்குரிய வாக்காளப் பெருமக்களுக்கு கூற விரும்புகின்றேன்.
கேள்வி:- உங்களுடய எதிர்காலத் திட்டங்கள் எவை?
பதில்: –அநுராதபுரம் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளின் கல்வி நிலையினை மேலோங்கச் செய்தல், வறிய குடும்பங்களில் கல்வியை தொடர முடியாமல் கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு உதவுதல், அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுதல், கல்வியை முடித்துக் கொண்டு தொழில் ஏதும் இல்லாமல் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளேன்.
அது எந்த மதத்தவராக இருந்தாலும் பரவாயில்லை. நாம் அனைவரும் மனிதர்களே. அந்த வகையில் உதவி செய்வது எமது கடமையாகும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK