தேசிய மக்கள் சக்தியின் ஊடக அறிவித்தல்

 


ஊடக அறிவித்தல் - 2024 சனாதிபதி தேர்தல்

2024  சனாதிபதி  தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை வெளியிடுகையில்  எந்தவிதமான முறைதகாத செயலுக்கும் இடமளியாமல் மேற்படி பணியை மிகவும் சரியாகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவும் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் நடவடிக்கை எடுப்பார்களென நாங்கள் நம்புகிறோம்.

அதைப்போலவே வாக்குகள் எண்ணப்படுகின்ற நிலையங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொலீஸாரை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகள் நடவடிக்கை மேற்கொள்ளுமென நாங்கள் நம்புகிறோம்.

இந்த நிலைமையில் இரவுநேர ஊரடங்குச் சட்டம்  தேர்தல் முடிவுகள் வெளியாகின்ற வேளையில் பொதுமக்கள் அமைதியை பேணிவருகின்ற நோக்கத்துடன் மாத்திரம் அமுலில் இருக்குமென நம்புகின்ற நாங்கள், தேர்தலுக்கு பிற்பட்ட காலத்தில் நாட்டில் உச்சமட்ட அமைதி நிலைமையைப் பேணிவருவதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் பிரிவுகளிடம் கேட்டுக்கொள்வதோடு  நாட்டில் அமைதிநிலையைப் பேணிவருவதற்காக உச்சஅளவிலான ஒத்துழைப்பினை நல்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.  

தேசிய மக்கள் சக்தி

2024.09.21

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்