அனுர முன்னிலையில் - அமெரிக்காவில் இருந்துகொண்டே ஆய்வு செய்த பசில்

 


[ ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக் ]

அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் இரண்டு மாதங்கள் ஒய்வைக் கழித்தார் பசில் ராஜபக்ச.

உண்மையில்,அவர் ஓய்வில் இருக்கவில்லை.நாட்டின் அரசியல் நிலைமையை அங்கிருந்தவாறே கவனமாக ஆய்வு செய்யத் தொடங்கினார்.

கிராம மட்டத்தில் உள்ள மொட்டு கட்சி நிர்வாகிகளின் உதவியுடன்  அந்த ஆய்வை மேற்கொண்டார்.

எல்லா ஆய்வுகளிலும்  கிடைத்த பெறுபேறு என்னவென்றால் அனுர முன்னிலையில் இருக்கின்றார் என்பதுதான்.

ஒட்டுமொத்தமாக வெறும்  ஐந்து வீத வாக்குகள்தான் மொட்டு கட்சி இருப்பதையும் அதைவிடக் குறைவான அளவே ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதையும் அந்த ஆய்வின் ஊடாக உணர்ந்தார் பசில்.

அப்படியென்றால்,வெல்வதற்கு என்ன வழி..????

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதுதான் ஒரே வழி .அதுவும் வெற்றிக்கான வழியல்ல.ஒரு முயற்சிதான்.

நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டு மற்றும் ஐ.தே .கவுக்குக் கிடைக்கின்ற ஆசனங்களை வைத்துக்கொண்டு ஏனைய கட்சிகளின் ஆசனங்களையும் விலைக்கு வாங்கி நாடாளுமன்ற ஆட்சியைப் பிடித்துக்கொள்ள முடியும்.

நாடாளுமன்ற ஆட்சி கைக்கு வந்துவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தமக்கே வாக்களிப்பர்.அதாவது,வெற்றி பெற்ற கட்சிக்கே மக்கள் வாக்களிப்பர் என்ற அடிப்படையில்...

உடனே இந்தத் திட்டத்தை எடுத்துக்கொண்டு நாட்டுக்கு ஓடி வந்த பசில் ரணிலைச் சந்தித்து இந்த அறிக்கையைக் காட்டி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறு கூறினார்.

ஆனால்,மொட்டு கட்சி எம்பிக்கள் யாரும் இதை விரும்பவில்லை.

காரணம் அதில் உள்ள அதிகமான எம்பிக்கள் அடுத்த தேர்தலில் வெல்லமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.

உரிய காலத்துக்கு முன் தேர்தலை நடத்தி அவர்கள் தோற்றுப் போனால் அவர்களுக்கு பென்ஷனும் இல்லாமல் போகும் என்பதால் ரணிலைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டாம்..முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்துங்கள்.நாங்கள் அனைவரும் உங்களுடன் வந்து இணைகிறோம் .உங்களை வெல்ல வைப்பதற்கு பாடுபடுவோம் என்றனர்.

அதன் அடிப்படையில்தான் ஜனாதிபதி பசிலின் வார்த்தையை உதாசீனம் செய்துவிட்டு ஜனாதிபதி தேர்தலுக்குச் சென்றார்.வாக்குறுதியளித்ததுபோல் அந்த மொட்டு எம்பிக்கள் ரணிலுடன் போய்ச் சேர்த்துக்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பசில் வருவது வரட்டும் என்று நாமலை மொட்டு வேட்பாளராக நிறுத்தும் மஹிந்தவின் முடிவோடு இணைந்து போனார்.

பசில் அமெரிக்காவில் இருந்து வந்த புதிதில் ரணிலுக்கு ஆதரவாக அதிகம் அதிகமாகப் பேசினார்.

எல்லோரது பார்வையிலும் மொட்டின் வேட்பாளர் ரணில்தான் என்றே பட்டது.

அப்படி இருக்கும்போது பசில் திடீரென பல்டி அடித்தது ஏன் என்று பலரும் கேற்கிறார்கள்.

நான் மேலே கூறியுள்ள சம்பவம்தான் அதற்குக் காரணம்.

ஆனால்,அனுரதான் ,வெல்வார் என்றும் தான் சொல்வதைக் கேட்டிருந்தால் நாடாளுமன்ற ஆட்சியையாவது பிடித்திருக்கலாம் என்றும் பசில் இப்போது புலம்பித் திரிகிறார்.

ரணிலை விட நான் மூளைக்காரன் என்பதை தேர்தல் முடிந்ததும் ரணில் புரிந்துகொள்வார் என்று பசில் அவருக்கு நெருக்கமானவர்களுடன் கூறியுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்