கல்முனை விடயத்தில் அம்பாறை GAக்கு அழுத்தம் கொடுக்கும் கிழக்கு ஆளுநர்


(றிப்தி அலி)

கல்முனை விடயத்தில் ஒரு தலைப்பட்டசமான முடிவொன்றினை மேற்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட செயலாளருக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகித்து வருதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலயத்திற்கு உடனடியாக கணக்காளரொருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்ச்சியாக மாவட்ட செயலாளருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார். 

இந்த அடிப்படையில் கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கலையரசன், சாணக்கியன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் அம்பாறை மாவட்ட செயலாளரை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் நீண்ட நேரம் பேச்சு நடத்தியுள்ளார். 

இதன்போதே அம்பாறை மாவட்ட செயலாளருக்கு கிழக்கு ஆளுநரினால் கடும் தோரணையில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்படும் மாவட்ட செயலாளருக்கு ஆளுநரினால் எந்தவித உத்தரவுகளையும் பிரயோகிக்க முடியாது. 

இவ்வாறான நிலையிலேயே கிழக்கு ஆளுநர், தனது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து உயர் அரச அதிகாரியொருவருக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளார். 

முஸ்லிம்களின் நண்பன் என பகலில் நடிக்கும் கிழக்கு ஆளுநர், இரவில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளையே கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்