உணர்வு பூர்வமான உண்மைச் சம்பவம்!

அது ஹஜ் நிறைவடைந்து ஹாஜிகள் தத்தமது நாடுகளுக்கு திரும்பும் காலம். ஜெத்தா விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தமது விமானத்தை எதிர்பார்த்து அருகருகில் உட்கார்ந்திருந்த இருவரின் உணர்வு பூர்வமான உரையாடல் இது...

ஒருவர் மற்றவரிடம்: " என் பெயர் நாசிர். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இத்துடன் பத்து தடவைகள் ஹஜ் செய்வதற்கு அல்லாஹ் எனக்கு பாக்கியம் செய்திருக்கிறான். நீங்கள் இதற்கு முன்னர் ஹஜ் செய்திருக்கிறீர்களா ?

சயீத் சற்று தயக்கத்துடன்:" இது என் முதல் ஹஜ். இறைவன் மீது ஆணையாக! இதற்குப் பின்னால் மிகப்பெரும் சரித்திரமே இருக்கிறது.

நாசிர்: அப்படி என்ன சரித்திரம்? சொல்லுங்களேன்...என்றார்.

சயீத்: நான் தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிகிறேன்.

ஹஜ் செய்வதற்காக பல வருடங்கள் தேவையான தொகையை சேர்த்தேன். குறித்த நாளில் பணத்துடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது நான் சிகிச்சை அளித்து வரும் ஊனமான ஓர் மாணவனின் தாயை கண்டேன். மிகவும் கவலையுடன் காணப்பட்டார் .

என்னை கண்டவுடன் : "உங்களது ஹஜ்ஜை அல்லாஹ் அங்கீகரிப்பானாக. இந்த வைத்தியசாலைக்கு நாங்கள் வருவது இதுதான் கடைசித் தடவை" என்று கூறினார்.

இதைக் கேட்டு நான் ஆச்சரியத்துடன்:" என் சிகிச்சையில் உங்களுக்கு திருப்தி இல்லையா? என்று கேட்டேன்.

அதற்கவர்: அதெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் ஒரு தந்தையைப் போலல்லவா என் மகனைப் பார்த்துக் கொண்டீர்கள்" என்றார்.

இப்போது நாசிர் குறுக்கிட்டு : " ஆச்சரியமாக இருக்கிறதே! அப்படியானால் ஏன் அவ்வாறு கூறினார்" என்று கேட்டார்.

சயீத்: நானும் அந்த யோசனையுடன் வைத்தியசாலை பணிப்பாளரிடம் இது பற்றி வினவியபோது அவரின் கணவர் இருந்த தொழிலையும் இழந்து விட்டார். தொடர்ந்தும் சிகிச்சைக்கான பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை என்ற விடயம் தெரிய வந்தது.

அதற்கு நாசிர்: மிகக் கவலை. அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக. நீங்கள் என்ன செய்தீர்கள்" என்று கேட்டார்.

சயீத்: தொடர்ந்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் : "அந்த சிறுவனுக்கு இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முடியாதா? என்று கேட்டேன். அவர் "இது தனியார் மருத்துவமனை. தொண்டு நிறுவனமல்ல என்று கூறி ஒரேயடியாக மறுத்துவிட்டார். அங்கிருந்து நான் உடைந்த உள்ளத்துடன் மிகக் கவலையுடன் வெளியேறினேன்.

அப்போது என்னிடம் இருந்த ஹஜ்ஜுக்கான பணத்தைப் பார்த்து அல்லாஹ்விடம்: இறைவா! ஹஜ் செய்வதும் உனது நபியுடைய பள்ளியை தரிசிப்பதும் எந்த அளவுக்கு எனக்கு விருப்பமானது என்பது உனக்குத் தெரியும். இருந்தும் ஹஜ் செய்வதை விட இந்த சிறுவனின் சுகத்துக்காக என் பணத்தை நான் கொடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு காசாளரிடம் சென்று அனைத்து பணத்தையும் அந்தச் சிறுவனின் ஆறு மாதத்திற்கான சிகிச்சைக்குரிய முன்பணமாக செலுத்து விட்டேன்.

இப்போது நாசிரின் இரண்டு கண்களில் இருந்தும் கண்ணீர் வடிந்தது. அல்லாஹ் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் பரக்கத் செய்வானாக. என்று கூறியவர்:" உங்களிடம் இருந்த அனைத்து பணத்தையும் நீங்கள் வழங்கி விட்டீர்கள். அப்படியானால் உங்களால் எப்படி இந்த வருடம் ஹஜ் செய்ய முடிந்தது? என்று கேட்டார்.

அதற்கு சயீத்: அன்றைய தினம் வீட்டுக்கு கவலையுடன் திரும்பினேன். ஆனால் உள்ளம் சந்தோஷத்தால் நிறம்பியிருந்தது.

அன்றிரவு நான் ஹஜ்ஜில் இருப்பது போலவும் மக்கள் எனக்கு ஸலாம் கூறி உங்கள் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக என்று பிரார்த்தனை செய்வது போலவும் கனவு கண்டேன். 

தூக்கத்தில் இருந்து எழுந்தேன்.வழமைக்கு மாற்றமான ஒரு சந்தோஷத்தை உணர்ந்தேன். அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்திய அந்த நேரம் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. வைத்தியசாலைப் பணிப்பாளர் : "எமது வைத்தியசாலையின் உரிமையாளர் ஹஜ் செல்வதற்கு விரும்புகிறார். அவருடன் ஒரு பிசியோதெரபிஸ்டும் கட்டாயம் செல்ல வேண்டும். அதனால்தான் உங்களுக்கு போன் செய்கிறேன். நீங்கள் போகிறீர்களா? என்று கேட்டார்.

இதைக் கேட்டு நான் அடைந்த ஆனந்தம்... அல்லாஹ் அவன் மிகப் பெரியவன்... அவனுக்கு நன்றி கூறி ஸுஜுத் செய்தேன். அல்லாஹ் எனக்கு ஒரு செலவும் இல்லாமல் ஹஜ்ஜை நிறைவேற்ற பாக்கியம் அளித்தான். அல்ஹம்துலில்லாஹ்...

அத்தோடு வைத்தியசாலை உரிமையாளருக்கு என்னுடைய சேவை மிகவும் பிடித்ததன் காரணமாக கொடுப்பனவு ஒன்றையும் தந்தார்.

நான் அவரிடம் அந்த ஏழை பெண்ணினுடைய விடயத்தை கூறி வைத்தியசாலையில் இலவசமாக சிகிச்சை அளிக்குமாறு வேண்டி கொண்டேன். 

உடனடியாக போன் மூலம் ஏற்பாடு செய்தார். 

அத்துடன் வேலையை இழந்த அந்த ஏழைப் பெண்ணின் கணவருக்கு தன்னுடைய மற்றொரு நிறுவனத்தில் வேலையும் வழங்குமாறு போன் மூலம் உரியவர்களுக்கு உத்தரவிட்டார். அது மட்டுமல்ல சிகிச்சைக்காக நான் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு ஏவினார்....

பார்த்தீர்களா... இறைவனுடைய உயரிய கருணையை... அவனுடைய அன்பை...

இதைக் கேட்டுக் கொண்டிருந்த நாசிர் எழுந்து சயீதுடைய நெற்றியில் முத்தமிட்டு இன்றைய தினம் நான் உணரும் வெட்கத்தைப் போன்று நான் என்றும் உணர்ந்ததில்லை. அவமானத்தையும் உணர்கிறேன். பத்து தடவைகள் ஹஜ் செய்து பெரும் விடயத்தை சாதித்து விட்டேன் என்றும் ஒவ்வொரு ஹஜ்ஜின் பிறகும் அல்லாஹ்விடத்தில் என்னுடைய அந்தஸ்து உயர்ந்திருக்கின்றது என்றும் நினைத்துக் கொண்டேன்.

ஆனால் நீங்கள் இப்போது செய்திருக்கக் கூடிய இந்த ஹஜ் என்னுடைய 10 ஹஜ்ஜையும் விட ஆயிரம் மடங்கு சிறந்தது என நான் உணருகின்றேன். 

ஹஜ்ஜுக்காக....

நானாக வந்திருக்கின்றேன்.

உங்களையோ அல்லாஹ் அழைத்து வந்திருக்கின்றான்.... என்று கூறி கண்ணீருடன் விடை பெற்றார்...

அல்லாஹ்வுக்காக செய்யப்படும் நலவுகள் பூமியில் விதைக்கப்படும் விதைகள் போன்றது. அதன் பலன்கள் அறுவடைகளாக நிச்சயம் எம்மை வந்து சேரும்.... எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...

மனதை வருடிய அழகான பதிவு.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்