சுகாதார தொழிற்சங்கங்களின் செயற்பாட்டால் இன்னல்களுக்கு தள்ளப்பட்டுள்ள திருகோணமலை மக்கள்


சுகாதார தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் துணை மாவட்ட இணைப்பாளர் தியாகராஜா பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (03.02.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த பொதுமக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும், சுகாதார ஊழியர்களின் குறித்த பிரச்சினையை இந்த அரசு முடிவுக்கு கொண்டுவராத பட்சத்தில் பொது மக்களுடன் ஒன்றிணைந்து தாம் அரசுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை இறுக்கும் சட்டமூலம்

தொடர்ந்தும், "சமூக ஊடகங்களுக்கான தடைச்சட்டம் ஒன்றினை இந்த நாடாளுமன்றம் கொண்டு வந்திருக்கிறது, குறித்த சட்டமானது பொது மக்களுக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது.

சுதந்திரமாக ஊடகங்களோ சமூக வலைத்தளங்களோ இயங்க முடியாத அளவிற்கு இச்சட்டமானது பொதுமக்களை இறுக்கியுள்ளது.

வார்த்தைப் பிரையோகங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் கருத்துச் சுதந்திரத்தினை வெளிப்படுத்தவும் இந்த அரசு வழிவகுக்க வேண்டும்.

அதனை விடுத்து இப்படியான சட்டதிட்டங்களூடாக மக்களை முடக்குவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது. எனவே, இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்"என்றார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK