முஷர்ரபின் திருகுதாள அரசியல்!!!

அண்மையில் கல்முனை  காணி விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ் மற்றும் முஷார்ரப் ஆகியவர்களிடையே, பாரிய வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டது. அத்தோடு பாராளுமன்றத்திலும் இச் சர்ச்சை தொடர்பான வாதங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். இவ் விவகாரமானது கல்முனையின் அரச காணியொன்றை பல போராட்டங்களுக்கும்,வழக்குகளுக்கும் மத்தியில் வென்று அரச காணியாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசின் முயற்சியினாலும் வென்று கொடுக்கப்பட்டிருந்தது. அக்காணியானது கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் காணப்பட்டிருந்தது. அக்காணியை கல்முனை மாநகர சபை தரிப்பிட வசதிக்காய், சில வருடங்களுக்கு முன் கல்முனை மாநாகர சபைக்கு வழங்கப்பட்டிருந்தது. அக் காணியில் தரிப்பிட வசதிகளுக்கான வேலைப்பாடுகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் கல்முனையின் அபிவிருத்திக் குழு தலைவரான முஷார்ரப் எம்.பி தாமே இச் செயற்பாட்டை செய்வதாக காட்ட முனைந்தமையாலே இவ் வாக்குவாதம் காணப்பட்டது.

அத்தோடு சில மாதங்களுக்கு முன் மருதமுனையின் வீட்டுத் திட்டமொன்று பல வருடங்களாக  மக்களுக்கு வழங்கப்படாமல் சர்ச்சையில் கிடந்தது. இவ் வீட்டுத் திட்டத்தை மக்களுக்கு தாம் கல்முனை அபிவிருத்தி குழு தலைவராக வந்து அவசரமாக  பகிர்ந்தளிப்பதற்கு  முயற்சி செய்தது போல் முஷார்ரப் எம்.பி காண்பித்து இருந்தார். இச் சந்தர்ப்பத்திலேயே கல்முனை பிரதேச செயலக செயலாளர் லியாகத் அலி இவ் வீட்டுத் திட்ட பகிர்ந்தளிப்பு விவகாரம் தொடர்பிலான பூரண விளக்கத்தை பகிர்ந்திருந்தார். அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டளவில் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டதாகவும், இவ் வீட்டுத்திட்டம்  தொடர்பான  விளக்கம்

பல தடவைகள் அபிவிருத்தி குழு கூட்டங்களிலும், பிரதேச செயலாளர்களுக்கான  கூட்டன்ஹ்களிலும் முன் வைக்கப்பட்டதன் விளைவாக முன்னாள் அரசாங்க  அதிபர்  பண்டாரநாயக்காவினால் இதற்கான குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவிவினால் மருதமுனை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற சிபாரிசை செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபராக வந்த டக்லஸிடம் இவ் விவகாரம் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்த போது அவரும் அக் குழுவின் சிபாரிசை தொடர்ந்து வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கான முயற்சிகளை 2022  காலப்பகுதிகளில் ஆரம்பிக்குமாறு வழங்கி இருந்தார். அதற்கு மேலதிக அரசாங்க அதிபர் ஜகதீசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்திருந்தார்.அக் குழுவினால் கடந்த ஒரு வருடகாலமாக ஆராயப்பட்டு, நேர்முகப்பரிட்சை எல்லாம் நடைபெற்று அரசாங்க அதிபரின் உத்தரவுக்கு அமைவாகவே வழங்கப்பட இருந்தது. இவற்றை எல்லாம் மறைத்து தாம் அபிவிருத்தி குழு தலைவராக வந்து தான் வழங்கியதாக படம் ஒன்றை காண்பித்து இருந்தார்.

அத்தோடு அண்மையில் ஆசிரியர் இடமாற்ற விடயத்தில் ஆளுனருடன் தொடர்பு கொண்டு தடுப்பதாகவும், ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு தடுப்பதாகும் ஒரு விம்பதத்தை காண்பித்து இருந்தார். அதன் பிறகும் இடமாற்றம் தடுக்கபடாததால் ஆசிரியர்கள் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்து இருந்தனர். இச் சந்தர்ப்பதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் நேரடியாக களத்துக்கு சென்று ஜனாதிபதியின் செயளாலருடன் பேசி, பல முயற்சியினூடாக இடமாற்றத்தை தடுத்து இருந்தார்.

ஆக இவ்வாறு ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து, அபிவிருத்தி குழு பதவியையும் வைத்துக் கொண்டு, எதனையும் செய்யாமல், வெறுமனே பெயருக்கு மாத்திரம் படம் காட்டிக் கொண்டு, எதிரணியில் இருப்பவர் தடுக்கின்றார் என குற்றச் சுமத்தி கொண்டு இருக்கின்றீர்கள். இவ்வாறான நிலை உமக்கு எதற்கு அரசினால் வழங்கப்படும் பதவிகள் எதற்கு?


முஹம்மட் மனாசிர், சம்மாந்துறை.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK