அல்ஹாஜ் மௌலவி ஆசிரியர் நவாஸ்தீன் (தீனி) எம்மை விட்டுப் பிரிந்தார்.

 


அநுராதபுர மாவட்டம் - நேகமையில் 1962/ 05/22 ஆம் திகதி பிறந்த நவாஸ்தீன் மௌலவி அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை நேகம முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்றார். பின்பு பாணதுரை தீனிய்யஹ் அரபுக்கல்லூரியில் ஆலிமாகப்பட்டம் பெற்று மஸ்ஜித்களில் பேஷ் இமாமாக பணி புரிந்தார்.

பின்பு ஆசிரியர் நியமனம் பெற்று பல பாடசாலைகளில் ஆசிரியப்பணி புரிந்ததுடன், சிறந்த அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார்.

இஜிபு என்றழைக்கப்படும் ஷரீப்தீன், ஸனீர், பௌஸ், ஜெஸ்லான் ஆகியோரின் சகோதரரான இவர் குர்ணாகல மாவட்டம் இப்பாகமுவ - கும்பலங்கையைச் சேர்ந்த ஆசிரியை ஸம்ஸுல் நிஸா (ஹமீதிய்யா முஸ்லிம் வித்தியாலயம், கும்பலங்க) மணமுடித்தார்.அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் குர்ணாகல மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், இப்பாகமுவ பிராந்தியத்தின் செயலாளராகவும் சேவை செய்ததுடன், பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்து, தன்னுடைய 62 ஆவது வயதில் இன்று 2024.01.03 புதன்கிழமை இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.அன்னாரது ஜனாஸா நல்லடக்கம். 2024.01. 03 . புதன்கிழமை. அஸர் தொழுகையுடன் கும்பலங்க முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படது 

வல்லவன் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, நன்மைகளை இஹ்லாஸுடன் ஏற்று மறு உலக வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றி ஜன்னதுல் பிர்தௌஸில் குடியமர்த்துவானாக...!

அவருடைய பிரிவில் வாடும் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தவர்களுக்கு ஆறுதலை வழங்குவானாக...! ஆமீன்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK