"நீதிபதியின் ராஜினாமாவும் சிக்குண்ட தீர்ப்பும்" – மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன்!


முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி கௌரவ T. சரவணராஜா அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் - பயமுறுத்தல்கள் காரணமாக அவர் தம் பதவியைத்  திடீரென ராஜினாமா (23/09/2023)  செய்தமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியதோடு  நீதியை மதிக்கும் அனைத்து மக்கள் மனங்களிலும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீதி  வழங்கும் நீதிபதிகளுக்கே பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் அச்சுறுத்தல் என்றால் நீதி தேவனின் நிலை என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்த வண்ணமுள்ளன. சட்டமாதிபர் திணைக்களத்தினாலேயே  நீதிபதி மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரிய வருகின்றது.

 

நீதிமன்றங்கள்அவற்றின்முன் வைக்கப்படும் ஆதாரங்கள்சாட்சிகள்விடயதானங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தீர்ப்பளிக்கின்றனவே தவிரநம்பிக்கையின் அடிப்படையிலோ ஊரில் உலாவும் கருத்துக்கள் சார்ந்தோ கர்ண பரம்பரைக் கதைகளின் அடிப்படையிலோ தீர்ப்பளிப்பதில்லை.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆதிசிவாலயம்அப்பிரதேசத்தின்  பூர்வீக இந்துக்களால் பல் நெடுங்காலமாக வழிபட்டு வந்த இடமாகும். அங்கு இப்போது தொல்பொருள் திணைக்களத்தாலும் தீவிரவாத சிங்கள பெளத்த அடிப்படைவாதிகளாலும் உரிமை கோரப்பட்டு - தன்னிச்சையாக பெளத்த விஹாரை கட்டிய வழக்கில் அக்கட்டிட வேலைகளுக்கு இடைக்கால தடை விதித்து வழங்கிய தீர்ப்பினாலேயே - நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் பயமுறுத்தலும் விடுக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. அத்துடன் தோண்டி எடுக்கப்பட்ட புதைகுழி மனித எச்சங்கள் குறித்தும் தமிழ் ஈழப் போரளி திலீபனின் ஞாபக அஞ்சலி குறித்தும் அவர் வழங்கி தீர்ப்புக்களும் இதற்கான காரணங்களாக அமைந்தன எனலாம்.

 

நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும்  அச்சமின்றி இயங்கினால் மாத்திரமே நெறிநீதியான தீர்ப்புகளை வழங்க முடியும். நீதித்துறையின் மீது (Judiciary), சட்டவாக்கத்துறையோ (Legislature) அல்லது சட்ட நிறைவேற்றுத்துறையோ (Executive) அழுத்தங்களை-  நெருக்கடிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செலுத்துமேயானால்நீதி என்பது கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு அது சர்வாதிகாரத்திற்கும் வழிவகுக்கும் என்பது வெள்ளிடை மலை.  அது மாத்திரமல்லாது ஒவ்வொரு தனி மனிதனதும் ஜனநாயக உரிமைகள்அடிப்படை மனித உரிமைகள் என்பவற்றை மீறும் செயலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

 

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஒரு சிறுபான்மைத் தமிழ் சமுகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என்பதுஏனைய சிறுபான்மைச் சமுகள் மத்தியில் அவநம்பிக்கை யையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வச்சத்தைப் போக்குவது இலகுவான காரியமல்ல.

 

ஒரு நீதிபதியின் மீதான தாக்குதல் என்பது முழு நீதித்துறையின் மீதான தாக்குதலாகும். நீதிபதி அவர்களின் ராஜினாமா நீதித்துறையின் மீது ஏற்பட்ட ஒரு மானக்கேடாகும்.  உலக அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட அபகீர்த்தியாகும்.

 

இன்று நாட்டில்  தமிழ் - மஸ்லிம்  சிறுபான்மைச் சமுகள் வாழும் பிரதேசங்களில் நில அபகரிப்பும் வணக்கஸ் தலங்கள் மீதான கெடுபிடிகளும் தொல்பொருள் என்ற போர்வையில் பெரும்பாண்மைச் சமுகத்தின் ஆக்கிரமிப்பு முஸ்தீபுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வெளிப்படையாகவே தெரிகின்றது. இது குறித்து சில நீதி மன்றத் தீர்ப்புக்கள்கூட புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் தெரிகின்றது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினரின் வாழ்விடங்களில் பெளத்த வழிபாட்டுத் தலங்களையும் புத்தர் சிலைகளையும் நிறுவி சிங்கள பெளத்த குடியேற்ற முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இது சிறுபான்மை மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் தோற்றுவித்துள்ளது.

 

வடக்கில் காங்கேசன்துறையில் பெளத்த விஹாரை அமைக்கப்பட்டமைவவுனியா வடக்கு மாவட்ட செயலாளர் பிரிவில் பெருங்குளம் பகுதியில் வெடுக்கு நாரிமலைக் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுளமைகிழக்கில் இறக்காமத்தில் மாயக்கள்ளிமலையில் புத்தர் சிலை வைப்புபொத்துவில் முஹுது மஹாவிஹாரை விவகாரம்தீகவாவி காணி விவகாரம்குச்சவெளியில் அரச அனுசரணையுடனான பெளத்த துறவிகளின் சில நில ஆக்கிரமிப்புக்கள் என்பவற்றோடுதிருகோணமலை நகரப் பகுதியில் அடாத்தாக பெளத்த விஹாரை அமைத்தல்கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவையும் மீறிய பெளத்த பிக்குகளின் எதேச்சாதிகார நடத்தைகன்னியா வெண்ணீறூற்று பகுதியில் பெளத்த விஹாரை நிறுவுதல் தென் இலங்கையில் பலான்கொட  பிரதேசத்தில்ஹூரடிகல எனும் ஊரில் அமைந்துள்ள‌  700 ஆண்டு களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லிகளின் வழிபாட்டு தளமான  "தப்தர் ஜீலானி" உடைக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டமை போன்றவற்றை உதாரணங்களாகப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

 

இத்தகைய சூழலில் நீதித்துறைல் சங்கடமான நிலைமைகள் நிலவுவதால்முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களின் ராஜினாமா குறித்து பக்கச்சார்பற்ற தகுதியான விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கும் படி  மேன்மை மிகு ஜனாதிபதி அவர்களை வேண்டி நிற்பதோடுநீதித்துறையின் அப்பழுக்கற்ற புனிதத்துவத்தை நிலைநிறுத்த வேண்டிய நடவடிக்கைகளை அதி விரைவாக மேற்கொள்ளும்படி பணிவாக வேண்டி நிற்கின்றோம்.

இவ்வேளையில் பாதிக்கப்பட்ட நீதிபதி அவர்கள் தமக்கு நீதி கிடைக்கும் வகையில் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது சர்வதேச நீதிமன்றத்தை நாடலாமாஎன சிந்திப்பது அவரையே பொறுத்த விடயமாகும்.


S.Subairdeen.

Secretary General. All Ceylon Makkal  Congress

04/10/2023.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK