அனுராதபுரம் ரயில் நிலைய உணவகத்தின் உணவுகள் மீது எலி - ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்த மக்கள்


அநுராதபுரம் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

 இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது கைத்தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்கமைய, ரயில்வே அதிகாரிகள், உணவகத்திற்கு சீல் வைத்ததையடுத்து, உணவகத்தை நடத்தி வந்தவர், சீலை உடைத்து, உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.

உணவகத்திற்கு சீல்

பின்னர் சுகாதார அதிகாரிகள் வந்து உணவகத்திற்கு மீண்டும் சீல் வைத்ததுடன், மறைத்து வைக்கப்பட்ட உணவை எடுத்து வருமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டனர்.

இந்த உணவகத்தை நடத்தியவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அனுராதபுரம் புகையிரத நிலையம் மட்டுமன்றி கொழும்பு கோட்டை, கண்டி, மஹவ மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களிலும் இதே நபர் உணவகங்களை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK