தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் (Yoon Suk Yeol) உலகச் சாரணர் விழா நடைபெறும் பூ-அன் (Bu-An) வட்டாரத்துக்குக் குளிர்சாதன வசதியுடைய பேருந்துகளையும் நீர் நிரப்பப்பட்ட வாகனங்களையும் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.கடும்
வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட சாரணர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.மருத்துவர்களும் தாதியரும்கூட அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.சாரணர் விழாவில் 158 நாடுகளைச் சேர்ந்த சுமார் 43,000 இளஞ்சாரணர்கள் பங்கெடுக்கின்றனர்.கொளுத்தும் வெயிலைத் தாங்கமுடியாமல் சிலர் துவண்டு விழுந்தனர்.பெரும்பாலோர் குணமடைந்துவிட்டனர்.
இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கின்றனர்.இந்த வாரத்தில் தென்கொரியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.சாரணர் விழா நடைபெறும் 12 நாளும் கடும் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை வல்லுநர்கள் முன்னுரைத்துள்ளனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK