மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (27) கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார்.

திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட மைத்திரிபால சிறிசேன ​​நீதிமன்றில் ஆஜராகாததால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தாக்குதல்களை தடுக்க தவறியதை சவாலுக்கு உட்படுத்தி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பின்னர் மார்ச் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணை நடத்த நீதவான் உத்தரவிட்டார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒரு காலை இழந்தவர் மற்றும் வணக்கத்திற்குரிய சிறில் காமினி ஆகியோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK