ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். எம்மை ஏமாற்றுபவர்கள், எம்மை அடி முட்டாளாகவே கணக்கிட்டிருப்பர். நாம் முட்டாள்களா என்பதை மக்களே சிந்திக்க வேண்டும், தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். கண் முன்னே பிழைகள் தெளிவாக விளங்க, கட்சி போதை அந்த பிழையை மறைப்பதனை போன்ற மடமை வேறு எதுவும் இருக்காது. நாம் மேலாக மதிக்கும், மதிக்க வேண்டிய மார்க்கத்தோடு விளையாடியோருக்கு மன்னிப்பா..?
அ.இ.ம.கா தலைமையானது ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது மிக உளச்சுத்தியோடு, அதனை எதிர்த்து போராடியது. இச் சந்தர்ப்பத்தில் அ.இ.ம.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது முஸ்லிம் சமூகத்தின் விருப்பத்திற்கு எதிராக செயற்பட்டமை யாவரும் அறிந்ததே! எந்த குழு ஜனாஸாவை எரிக்க காரணமாக இருந்ததோ, அந்த குழுவுக்கு கூஜா தூக்கி கொண்டிருந்தனர். இதனை விட கேவலம் வேறு எதுவும் இரிக்காது. உலக முஸ்லிம்களே, அவர்களுக்கு முடிந்தளவு எம்மோடு பல விதங்களிலும் தோள் கொடுத்து நின்றமையை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது.
இந்த பா.உறுப்பினர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இதுவே சமூகத்தின் முதன்மை அவாவாகவும், இந்த பாவத்தில், தங்களுக்கு பங்கில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவையாகவும் இருந்தது. ஜனாஸாக்களை எரித்த வேளை, அவ் அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டில் மிகக் கடுமையான பொறிக்குள் அ.இ.ம.காவின் தலைவரும் இருந்தார். அவ் வேளை அவர் பட்ட இன்னல்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இவ்வாறான நிலையிலும் இச் சமூகத்திற்கு துரோகம் இழைத்த பா.உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தார். அவர்களை, தனது கட்சியிலிருந்து உடனடியாக தூக்கி வீசியிருந்தார். அவர்களோடு இன்று வரை எத் தொடர்பையும் பேணாதும் உள்ளார்.
அ.இ.ம.கா தலைமையின் இச் செயல், ஏனைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து நீக்க தூண்டியது. மக்கள் மறக்கும் வரை நீக்குவது போன்று நடிக்கவாவது தூண்டியது எனலாம். இன்று ஏனைய கட்சியினர் எவ்வாறு நடந்துள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே! இவர்களை போன்று மக்கள் மறக்கும் வரை பா.உறுப்பினர்களை தற்காலிகமாக நீக்கி விட்டு, தகுந்த நேரத்தில் இணைத்திருக்கலாம். இவ்வாறு மக்களை ஏமாற்றும் இழி அரசியலை அ.இ.ம.கா தலைமை செய்யவில்லை. தன்னை நம்பியவர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளிக்கவில்லை.
ஜனாஸாக்களை எரித்த கொடுங்கோல் அரசால் அ.இ.ம.கா தலைமை சொல்லொன்னா துயரத்தை அனுபவித்தது. அவரது முழு குடும்பமே துயரத்தின் உச்சியில் நின்றது எனலாம். முகம் மூடி, பக்குவமாக வாழ்ந்த அவரது மனைவி சிறைக்குள் இருந்தார். இவ்வாறான நிலையில் குறித்த பா.உறுப்பினர்களை அ.இ.ம.கா தலைமை நீக்கும் விடயமானது, மேலும் அவரது சிக்கலை தீவிரமாக்கும் என்பது சாதாரணமாகவே ஊகிக்க இயலுமானது. இது அ.இ.ம.கா தலைவருக்கும் நன்கே தெரியும். இதனை நன்கறிந்து கொண்டே சமூகத்துக்காக இவர்களை கட்சியிலிருந்து தூக்கி வீசியிருந்தார். இதனை மக்கள் அறியும் வண்ணம் இலகுவாக சொல்வதாக இருந்தால், " ஜனாஸா எரிப்பு நடைபெற்றதை கூட கணக்கில் எடுக்காது, ஜனாஸாக்களை எரித்த அரசை ஆதரித்த பா.உறுப்பினர்களுக்கு, தன்னையும், தனது குடும்பத்தையும் அடமானம் வைத்தே " குறித்த தீர்மானத்தை எடுத்தார் எனலாம். அவரது இத் தீர்மானம், அன்று அவரது சிக்கலை மேலும் தீவிரமாக்கியிருந்தது என்பதே உண்மை.
இது தான் தலைமைத்துவ பண்பு. தனக்கு தாங்க இயலாதளவு சிக்கல்கள் நிறைந்திருந்த போதிலும், தனது சொந்த விடயத்துக்காக சமூகத்தை அடமானம் வைக்கவில்லை. சமூகத்துக்காக தன்னையும், தனது குடும்பத்தையும் இழக்க துணிந்தார். இதனை விட தியாகம் வேறு ஏதிருக்க முடியும். இது போன்ற எந்த சிக்கல்களும் ஏனைய கட்சியின் தலைவர்களுக்கு இல்லை. இவ்விடயத்தில் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டுள்ளனர் என்பதை நான் சொல்ல தேவையில்லை.
இனியாவது சிந்திப்போம்.. எம்மை முட்டாளாக்கி, ஏமாற்றும் அரசியல் வாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். சமூகத்துக்காக அரசியல் செய்யும் அ.இ.ம.காவை ஆதரிப்போம்.
குறிப்பு : தற்போது அவர் குறிப்பிட்ட குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK